News Just In

3/27/2021 08:28:00 AM

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தகப்பனும் அவரது இரண்டு சிறுவர்களும் ஸ்தலத்திலேயே பலி!!


கிளிநொச்சி - பளை - இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.

ஏ-9 வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்றும், மகிழுந்து ஒன்றும் மோதியதில் நேற்றிரவு 9.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த மகிழுந்தை செலுத்திய 38 வயது நபரும், அவரின் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தை அடுத்து, பாரவூர்தியின் சாரதி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.





No comments: