News Just In

3/27/2021 12:45:00 PM

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!!


புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

லேசான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுறையின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சச்சின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை சச்சின் டெண்டுல்கரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: