News Just In

1/26/2026 10:21:00 AM

ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்!

ஆட்டம் காட்டும் ட்ரம்ப் - உலக சந்தையில் தங்க விலை வரலாறு காணாத உச்சம்



உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மார்ச் 2020 இல் கொரோனா தொற்றுக்குப் பிறகு இது மிகப்பெரிய உயர்வாகும் என்றும் வெள்ளியும் இந்த ஆண்டு 44% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு கூ100ஐத் தாண்டியது வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மற்றும் காசாவில் நடந்த போர்களும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது ஆகியவையும் தங்கத்தின் விலை உயர காரணமாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், தங்கத்தின் விலை மேலும் உயர்வடையக்கூடும் எனவும், இவ்வருட இறுதிக்குள் அது 5,500 டொலரை தாண்டும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இதற்கு இணையாக ஏனைய உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.74% இனால் அதிகரித்து 107.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு அவுன்ஸ் பெலேடியத்தின் (Palladium) விலை 0.17% இனால் அதிகரித்து 2,013.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

No comments: