News Just In

3/03/2021 04:10:00 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டக்களப்பு ஏறாவூரில் முதலாவது பெண் மரணம்..!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏறாவூரில் முதலாவது பெண் மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

65 வயதான பெண்ணொருவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவிலிருந்து கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மரணமாகியுள்ளார்.

இந்தப் பெண்ணின் குடும்பத்தில் கணவர் பிள்ளைகள் உட்பட மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments: