செவிப்புலனற்றவர்களையும் ஏனைய இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சீவரட்ணம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு ஓவியக் காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
ஓவியக் காட்சிப்படுத்தலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வை.எம்.சி.ஏ பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ் சர்வோதய திட்ட இணைப்பாளர் கோசானி எட்மன்ட் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு சங்கத் தலைவர் பி. கஜதீபன் வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள் மண்முனை வடக்கு பிரதேச கழகத்தவர்கள் செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் பயனாளிகளான இளைஞர் யுவதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: