இதன்போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளையும், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும் பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும், பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. பாராட்டி, தெரிவு செய்யப்பட்டோர் பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க உட்பட தொழிற்சங்கத்தின் உயர் பீட உறுப்பினர்ககள் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் "முகை" விழா மலர் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: