News Just In

3/29/2021 02:53:00 PM

மட்டக்களப்பு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுஷ்டிப்பு!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
உலக கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் மிக முக்கிய நாளாகக் கருதப்படும் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அத்தினம் விசேட திருப்பலிகளுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு புளியந்தீவு அந்தோனியார் திருத்தலத்தில் இருந்து மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையாவின் விசேட ஜெப வழிபாடுகளுடன் குருத்தோலை ஆசீர்வதிக்கப்பட்டு ஊர்வலமாக மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆயரின் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட குருத்தோலை மரியாள் பேராலயத்தில் வைக்கப்பட்டு நடைபெற்ற விசேட திருப்பலியை தொடர்ந்து மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

இதேவேளை குருத்தோலை ஞாயிறு விசேட திருப்பலி மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்திலும் சிறப்பிக்கப்பட்டது

குருத்தோலை ஞாயிறு நிகழ்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் நிகழ்த்தப்பட்டது என்பதுடன் குருதடதோலை தினத்தை உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் விசேட விதமாக நினைவு கூர்ந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments: