News Just In

3/11/2021 09:19:00 AM

அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை!!


நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான கொவிட் தடுப்பூசியை ஏப்ரல் முதல் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: