News Just In

3/11/2021 10:04:00 AM

கொரோனா தொற்றால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 515 ஆக உயர்வு!!


நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 342 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 86,685 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 295 பேர் மினுவாங்கொட - பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

அதனால் மினுவாங்கொட - பேலியகொட கொவித் கொத்தணிப் பரவலில் சிக்கிய நோயாளர்களின் எண்ணிக்கையும் 82,352 ஆக பதிவாகியுள்ளது.

ஏனைய 42 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 457 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 83,210 ஆக காணப்படுகிறது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,960 பேர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 340 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இன்றைய (10) தினம் 300 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 503 வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 511 இல் இருந்து 515 ஆக அதிகரித்துள்ளது.

No comments: