கிறிஸ்தவர்களுக்கு எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். இதன்போது தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறும் என்பதுடன் அதிகளவான மக்களும் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்புக்கமைய, நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: