கிழக்கிலங்கையின் மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்சமய இளைஞர்களுக்கு இணையத்தளம் வடிவமைத்தற்கான மூன்று நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை 28.03.2021 இணையத் தளம் ஆரம்பிக்கப்பட்டது.
சமாதானத்திற்குக் கை கொடுப்போம் என்பது இந்நிகழ்வின் தொனிப் பொருளாகும்.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர் ஏ . ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் பலசமய ஒன்றியத்தின் மத தலைவர்கள் சிரேஷ்ட வளவாளர்கள் மாவட்ட சர்வமத இளைஞர் யுவதிகள் ஆகியோர். கலந்துகொண்டனர்.
இங்கு பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: