உலக நாடக தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இது நடத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள பயிற்சி பட்டறைக்கான ஆரம்ப நாள் நிகழ்வும் முன்னாயத்த விழிப்புணர்வு வீதி நாடகமும் சனிக்கிழமை 27.03.2021 மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் டி ஈஸ்வரராஜா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் களான வி. தர்மரட்ணம் அருள் மொழி நிஷாந்தி கலாராணி ஜேசுதாசன் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதேச இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
No comments: