News Just In

3/23/2021 09:31:00 PM

திருகோணமலையில் காணாமலாக்காப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டிருந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது...!!


திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் இடம் பெற்று வந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் (09) ஆவது தொடரப்பட்ட நிலையில் இன்று மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

திருகோணமலை சிவன் ஆலய குருக்கள் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் க.செல்வராசா, பட்டினமும் சூழலும் பிரதேசத்தின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் வெ.சுரேஷ் குமார் உட்பட இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த குறித்த சங்கத்தின் தலைவி திருமதி நா.ஆசா மற்றும் திருமதி கோசளா தேவி ஆகிய இருவருக்கும் இளநீர் வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவி கருத்து தெரிவிக்கையில் கடந்த 15 திகதி தொடக்கம் இற்றை வரை ஒன்பது நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் தங்களுக்கான நீதியான முடிவுகள் இது வரை எதுவும் கிடைக்கவில்லை அரசாங்கம் எங்களுக்கு விரைவான முடிவுகளை தருவதாக ஏமாற்றுகின்றனர் தீர்க்கமான முடிவுகளை தரக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது சர்வதேச விசாரனை தேவை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றனவற்றை வைத்து பதில் ஒன்றை தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க நீதி கிடைக்காவிடின் தீக்குளிக்கவும் நேரிடலாம்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஒருவர் யாழ் மண்ணில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார் இப்படியாக நாங்களும் இறக்க வேண்டி வரலாம் இனிமேல் தொடர்ச்ச்சியாக இப்படி இருக்க முடியாது தீக்குளிக்க வேண்டியும் ஏற்படலாம் தங்களை தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றி வருகிறது இதற்கான நீதியான சர்வதேச விசாரனை தேவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் அவர்கள் இதனை கைவிடுமாறும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியதாலும் இந்த போராட்டத்தை இன்று (24) நண்பகல் 12 மணியளவில் கைவிடுகிறோம் என்றார்.





No comments: