இதன்படி, எதிர்வரும் காலங்களில் சாதாரண தரப்பரீட்சையை ஓகஸ்ட் மாதமும், உயர் தரப்பரீட்சையை டிசம்பர் மாதமும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.
இதற்கமைய, இது தொடர்பான பிரேரணையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு புதிய அட்டவனையின் அடிப்படையில் பரீட்சைகளை நடத்துவதின் ஊடாக, மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலங்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என, கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை, தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: