News Just In

3/14/2021 07:50:00 AM

இதயங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் கட்டுமுறிவு 6ம் கட்டை பாலத்திற்கான அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது!!


இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு 6ம் கட்டை பாலத்திற்கான அடிக்கல்லானது பின்தங்கிய கிராமப் பிரதேச மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனால் (அமல்) நேற்று (13) நட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அற்ற பிரதேசமாகவும், அதிகஸ்டப் பிரதேசமாகவும் கட்டுமுறிவு கிராமமானது காணப்படுவதுடன் பிரதான போக்குவரத்து பாதையினை இணைக்கும் 6ஆம் கட்டைப் பாலமானது உடைந்த நிலையிலும்இ பாதுகாப்பான போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாகவும் காணப்படுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக இப் பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லானது நடப்பட்டுள்ளது.

இதயங்களை ஒன்றினைக்கும் திட்டத்தின் ஊடாக தனது கனவும்இ கட்டுமுறிவு மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியும் நிறைவேறியுள்ளதாகவும் இப் பாலம் அமைக்கப்படாததன் காரணமாக பொதுமக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக நேரம் தாமதமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றமையால் பாம்பு தீண்டி ஓர் குழந்தை பரிதாபகராமாக இறந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இனியொரு அவலம் ஏற்படக் கூடாது என இப்பாலத்தினை அமைக்க வேண்டும் என்று சிபார்சு செய்ததாகவும் மேலும் தெரிவித்தார்.






No comments: