News Just In

3/23/2021 02:51:00 PM

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க திட்டம்!!


முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில் கோராப்பட்டுள்ளது.

குறித்த 400 ஏக்கர் காணியில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்கு உரிய தமிழ் மக்களுடையது என்பதுடன், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில், 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் கோரிய விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது.

அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: