News Just In

3/02/2021 05:45:00 PM

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவுள்ளதாக தகவல்..!!


30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது 5 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் oxford-astrazeneca covishield தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேர் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டுள்ளனர்..

இந்த நிலையில், நேற்று மாத்திரம் 42 ஆயிரத்து தொள்ளாயிரத்து 25 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பில் 83 ஆயிரத்து 430 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

No comments: