News Just In

3/31/2021 12:38:00 PM

மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 123வது பிறந்ததின நிகழ்வுகள்...!!


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 123வது பிறந்ததின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா அவர்களின் தலைமையில் வாவிக்கரை வீதியில் தந்தை செல்வா சிலை அமைந்துள்ள பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் நிருவாகிகள், தந்தை செல்வாவின் பேரனாகிய எஸ்.சி.சி.இளங்கோவன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட்டது.














No comments: