கல்குடா உதைப்பந்தாட்ட கழகம் ஏற்பாடு செய்த உதைப்பந்தாட்ட பயிற்சி முகாம் திங்கட்கிழமை (22) ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கல்குடா உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ஏ.எல்.எம்.சதாம் (அக்ரம்) தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பயிற்சி முகாமில் கல்குடா பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் உதைப்பந்தாட்ட வீரர்கள், பாடசாலை மாணவர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றினர்.
தேசிய உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இப் பயிற்சி முகாம் 24 ஆம் திகதி வரை தொடராக நடைபெறும் என்று கல்குடா உதைப்பந்தாட்ட கழக தலைவர் ஏ.எல்.எம்.சதாம் (அக்ரம்) தெரிவித்தார்.







No comments: