News Just In

2/23/2021 07:33:00 PM

மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதி- மக்கள் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தம்; 93 பேருக்கு PCR பரிசோதனை!!


மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் நேரடியாக தொடர்புகளை பேணிய மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 20பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அதில் பங்குகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் மாநகரசபையின் பிரதான கணக்காளர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபை மக்கள் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் 93 ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ள பொலிஸார் அது தொடர்பான சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.








No comments: