News Just In

2/23/2021 08:03:00 PM

யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் கோரவிபத்து- 20 வயது இளைஞன் பலி- ஒருவர் படுகாயம்!!


யாழ்ப்பாணம்- சாவகச்சேரி அரசடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியம் (வயது – 20) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




No comments: