News Just In

1/25/2021 04:37:00 PM

கிளிநொச்சி - ஒரு வங்கி ஒரு கிராமம் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது..!!


கெளரவ வடமாகாண ஆளுனர் அவர்களது சிந்தனைக்கு அமைவாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு வங்கி ஒரு கிராமம் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற அரச மற்றும் தனியார் வங்கிகள் ஒவ்வொரு கிராமங்களையும் தத்தெடுத்து கிராமங்களின் வளர்ச்சிக்கு முழுமையான பங்களிப்பினை வழங்குவதன் ஊடாக மாவட்டத்தின் உயர்வான பொருளாதார நிலமையினை கட்டியெழுப்புதல் இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த கலந்துரையாடலில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் ,திட்டமிடல் பணிப்பாளர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள்,கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்,மாவட்ட விவசாய பணிப்பாளர்,அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செயற்திட்டத்தின் முதலாவது செயற்திட்டம் கடந்த 19ஆம் திகதி தேசிய சேமிப்பு வங்கியின் அனுசரனையுடன் கெளரவ வடமாகாண ஆளுனர் அவர்களினால் கிளிநொச்சி திருவையாறு மேற்கு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments: