யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு பிரதேசத்துக்கு கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா மட்டக்களப்பு நகரில் கைப்பற்றப்பட்டதுடன் இரு சந்தேகநபர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் மட்டக்களப்பு நகரில் வாகனம் ஒன்றினை இடைமறித்து நடத்திய திடீர் வேட்டையின் போது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் மூன்று கிலோ கஞ்சா போதைப் பொருள் மற்றும் கடத்தி வரப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்தெரிவிக்கின்றது.
நேற்றிரவு நடுநிசியான 12 மணி வரையில் இந்த சட்ட விரோத கஞ்சா கடத்தல் முறியடிக்க பட்டதாகவும் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் ஒட்டுசுட்டான் மற்றும் பளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களும் பொருட்களும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .
மட்டக்களப்பு மாவட்ட பிரதீப் பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேனாவின் வின் பணிப்பில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிசின் ஆலோசனையில் மாவட்ட விசேட விசாரணை பிரிவு இந்த சட்டவிரோத கேரள கஞ்சா கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விசாரணை முடிவுற்றதும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் சந்தேக நபர்களும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கின்றனர்.





No comments: