கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இன்று இதனை கூறியுள்ளார்.
சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கி, தமது பிரதேசத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் அட்டுலுகம மக்கள் செயற்படாவிட்டால் அதிக காலத்துக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தன்னிச்சையாக செயற்படும் ஒரு சிலரினால் முழு களுத்துறை மாவட்டத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: