News Just In

12/04/2020 09:41:00 AM

விடுமுறை வழங்கியமையினால் கோபமடைந்து கொரோனா பரப்பிய நபர்; வட்டரெக்க சிறைச்சாலையில் சம்பவம்...!!


வட்டரெக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் கொரோனா பரப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட்டரெக்க சிறைச்சாலையின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்ததனை கோபமடைந்த சிறைக்காவலர் “உனக்கு கொரோனா பரப்ப வேண்டும்” என கூறி கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட அதிகாரிகள் சிலரை கட்டிப்பிடித்தமை தொடர்பில் மீகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாத சிறை காவலர், ஓய்வரைக்கு சென்று அதிகாரிகளின் கட்டிலில் பபுடுத்துள்ளார். ஏனைய அதிகாரிகளின் சீருடைகள் மற்றும் ஏனைய ஆடைகளை அணிந்து கசைத்துவிட்டு மீண்டு வைத்து வந்துள்ளளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை தொடர் அங்கு விசேட கடமைக்காக சென்ற அதிகாரி வீடுகளில் சுய தனிமைப்படுவதற்கு 14 நாட்கள் விடுமுறை வழங்குவதற்கு சிறைச்சாலை உயர் அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விசேட கடமைக்காக சென்று மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு சென்ற கட்டுப்பாட்டு அதிகாரி இந்த விடயத்தை பாதுகாப்பு காவலரிடம் தெரிவித்தள்ளார்.

இதனால் கோபமடைந்த பாதுகாவர் கொரோனா பரப்புவதாக கூறி இவ்வாறு மோசமான முறையில் செயற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: