News Just In

12/02/2020 07:37:00 AM

உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களால் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்!


2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சிலரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, 44 மாணவர்கள் கையொப்பமிட்டு குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தாம் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும், பெளதீகவியல் மற்றும் பொறியயில் பீடங்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதில், தமக்கு அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதன்படி, கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ், கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 25 பேர், மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மனுவின் பிரதிவாதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து, விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, பெளதீகவியல் மற்றும் பொறியயில் பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: