வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்கவினால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த குழுவின் அறிக்கையை, இரண்டு வார காலத்துக்குள் சமர்பிக்குமாறு, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று (03) இடம்பெற்றது.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே, அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
பொலன்னறுவை மனம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள யக்குரே வீதியை, மீண்டும் திறப்பது குறித்து ஆராய்வதற்காக, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அண்மையில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, குறித்த விஜயத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வயல் வெளிக் காணியை விடுவிப்பது என்பன தொடர்பில், குறித்த குழு கவனம் செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்ட பணிப்புரையை, செயற்படுத்தாமைக்கான காரணம் குறித்தும், அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

No comments: