News Just In

12/04/2020 10:34:00 AM

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்கள் தாயகம் திரும்பின...!!


திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் நேற்று (03.12.2020) இலங்கையிலிருந்து தாயகம் நோக்கி புறப்பட்டன.

வழி நடத்தப்பட்ட ஏவுகணை க்ரூஸர் ரக கப்பலான ´வரியாக்´, நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ´அட்மிரல் பண்டெலேவ்´ மற்றும் நடுத்தர கடல் டேங்கர் ரக கப்பலான "பெச்செங்கா" ஆகிய ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் நவம்பர் 30ம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்தது.

குறித்த கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதர்காகவும் சிறிது தரித்து நிற்பதற்காகவும் வருகை தந்தாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மீள் நிரப்புதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டிற்கு வருகை தந்த மூன்று ரஷ்ய கப்பல்களும் இன்றையதினம் திருகோணமலை துறைமுகத்திலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: