News Just In

12/01/2020 10:00:00 AM

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது..!


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்.

கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.

கொவிட் தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காணொளி அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னுரிமை அளித்துள்ளார். இது “சபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அண்மையில் தொழில்நுட்ப அமைச்சை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தார்

No comments: