News Just In

12/01/2020 10:08:00 AM

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (01.12.2020) காலை நாடு திரும்பியுள்ளனர்..!!


கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று
(செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 49பேரும், ஜேர்மனிலிருந்து 5பேரும், கட்டார்,தோஹாவிலிருந்து இரு விமானங்களில் 36பேரும் மற்றும் 59பேரும் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினமும், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 349 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும் கட்டாரின் தோஹாவிலிருந்து 21 பேரும் ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் இவ்வாறு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: