News Just In

12/01/2020 09:49:00 AM

மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட காவற்துறை கான்ஸ்டபிளுக்கு பதவியுயர்வு..!!


மணல் கொள்ளையை தடுக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் காவற்துறை கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

காவற்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவர் காவற்துறை சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி குருநாகல் - கொபேய்கனை - ஹாத்தலவ பிரதசத்தில் தெதுருஓயவில் இடம்பெறும் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற குறித்த காவற்துறை கான்ஸ்டபிள், மணல் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி நிகவெரடிய-குளியாபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments: