News Just In

12/01/2020 09:40:00 AM

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்...!!


திம்புள்ள – பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து குறித்த பகதிகளுக்குச் சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அறுவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: