News Just In

12/03/2020 12:10:00 PM

சில மாவட்டகளுக்கான அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படவுள்ளன!..


புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மூடப்படவுள்ளன.

புறேவி சூறாவளியின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டே இவ்வாறு இன்றைய தினம் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண பாடசாலைகளையும் மூடப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகள் நாளை வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: