News Just In

12/01/2020 11:57:00 AM

வடக்கில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி கண்டனம்..!!


வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த அவர், இந்துக்களின் பண்டிகை தொடர்பாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு அண்மையில் கார்த்திகை விளக்கீடு அன்று கிளிநொச்சி பரந்தனில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் யால் பல்கலை மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் சிறிதரன்அதிருப்தி வெளியிட்டார்.

மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்ட சிறிதரன், சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

No comments: