News Just In

12/02/2020 10:36:00 AM

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சுகாதார விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!!


கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

இதற்கமைய முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் 950 பேர் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments: