இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 4 மணிவரையிலான 18 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹேகித்த, பள்ளியாவத்த, வெலிஅமுண வீதி, பலகல, கலகஹதுவ, மருதான வீதி, எலக்கந்தை மற்றும் ஹெந்தல வீதி ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
வத்தளை நீர் விநியோகக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு சமாந்தரமாக, ஹேகித்த நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்தல் நடவடிக்கைகளின் காரணமாக இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: