ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் உறுப்புரிமை கொண்டுள்ள காரணத்தினால் நியமனம் நிராகரிக்கப்பட்ட நிலையில், மேன்முறையீடு செய்திருந்த தொழிலற்ற பட்டதாரிகளின் பெயர் விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் தலைமையில், அமைச்சின் ஆலோசனைக்குழு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று கூடியது.
இதன்போது குறித்த பெயர்ப்பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் மேன்முறையீடு செய்திருந்த 3 ஆயிரத்து 902 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments: