News Just In

11/01/2020 08:35:00 AM

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரம் வெளியாகியது!!


இலங்கையில் நேற்றைய தினம் 239 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை சேர்ந்த 59 பேரும். பேலியகொடை கொவிட் 19 நோயாளர்களுடன் தொடர்புடைய 180 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 662 ஆக உயர்வடைந்துள்ளது

அதேநேரம், பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 185 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 78 ஆக உயர்வடைந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 117 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 6 ஆயிரத்து 244 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: