News Just In

11/01/2020 01:57:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் பொரளை காவற்துறையின் 7 அதிகாரிகள் உள்ளிட்ட 78 காவற்துறையினருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது

இந்தநிலையில், மேலும் 22 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து 235 பெண் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம், துறைமுகம், தெமட்டகொடை, மாளிகாவத்தை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய காவற்துறை நிலையங்களில் புதிதாக கொவிட் 19 தொற்றுயானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: