News Just In

10/27/2020 02:22:00 PM

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல்!!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்போது ரிஷாட் பதியூதீனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னார் பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து சென்றமை ஊடாக பொது சொத்துக்கள் முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் அவர், கடந்த 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து. இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: