News Just In

10/31/2020 04:57:00 PM

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட இடங்கள் தவிர்ந்த இடங்களில் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது!!


ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் இந்த வைபவங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் திருமண வைபவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

இந்த ஹோட்டலில் 35 பேரின் பங்களிப்புடன் திருமண வைபவம் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் முகாமையாளருக்கும், ஏற்பாடு செய்தவர்களுக்கும் எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக ஹோட்டல் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: