News Just In

10/28/2020 05:03:00 PM

மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கிடையிலான சந்திப்பு!!


கிழக்கு மகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கிடையிலான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஆளுனருடனான உத்தியோகபூர்வ முதலாவது சந்திப்பு இதுவாகும். 

இதன்போது ஆளுநர் மக்கள் காலடிக்குச் சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் ஆளுனரின் மக்கள் சந்திப்புக் காரியலயமும் பார்வையிடப்பட்டது.

இச்சந்திப்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், ஆளுனரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்மபத் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments: