News Just In

10/31/2020 06:48:00 AM

அம்பாறையில் நடந்த துயரச் சம்பவம்- மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு!!


அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகனின் பெற்றோரான யோகேஸ்வரன், ஜெயசுதா ஆகிய கணவன், மனைவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் வழமைபோல காலையில் சென்று சேனைப்பயிர் செய்கையில் இடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணிக்கு கனத்த மழையுடன் இடி மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர்.



No comments: