News Just In

10/24/2020 04:47:00 PM

அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் இலங்கையில் காரணம் வெளியாகியது!!


அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை வருகையை முன்னிட்டு அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்க விமானப் படைக்கு உரித்தான ஆர்.சீ.எச்-1815 ரக விமானத்தில் நேற்று மாலை நாட்டை வந்தடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பே இம் மாதம் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கடந்த 20ஆம் திகதி தெரிவித்திருந்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறித்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது மைக் போம்பே இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரமதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: