கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்ற வேண்டிய சகல விதி முறைகளையும் கடைப்பிடித்தது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் தலைமையில் இன்று (24) சிறப்பாக இடம்பெற்றது.
மாவட்ட செயலக இந்து கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இவ் வாணி விழா நிகழ்வில் பஜனை நிகழ்வுஇ கடவுள் வாழ்த்து போன்ற விசேட நிகழ்வுகளுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்களினால் பூசை நிகழ்வும் இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கருணாகரன் உரையாற்றினார்.
இவ் வாணி விழா நிகழ்வின் விசேட நிகழ்வாக மாணவர்களுக்கான கலைவாணி கல்வி உதவி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்இ திணைக்களத் தலைவர்கள்இ உத்தியோகத்தர்கள் பலரும் சுகாதார விதி முறைகளை முழுமையாக பின்பற்றி கலந்துகொண்டனர்.
No comments: