News Just In

7/17/2025 08:26:00 PM

மட்டக்களப்பில் உள்ள அரச வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் கைது.

மட்டக்களப்பில் உள்ள அரச வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் கைது.


 1கோடி 10 இலட்சத்தை ஏப்பம் விட்ட மட்டக்களப்பில் உள்ள அரச வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் கைது.

மட்டக்களப்பு அரச வங்கி ஒன்றில் 1 கோடி 10 இலட்சத்தினை சூறையாடிய செங்கல்லடியில் வசிக்கும் 37 வயது பெண் முகாமையாளரை குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (16.07.2025) கைது செய்தனர்.
வங்கியில் வைப்பிலிட்ட பணத்துக்குரிய அரசாங்கத்திற்குரிய வருமான வரியையே இப் பெண் முகாமையாளர் கையாடியுள்ளதாக வர்த்தக குற்ற முறைப்பாடு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்தே மட்டக்களப்பில் உள்ள அரச வங்கியொன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க குருவிட்ட அவர்களின் ஆலோசனைக்கிணங்கவே சந்தேக நபரை வா்த்தக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: