News Just In

7/17/2025 08:20:00 PM

பிள்ளையான் குழுவிற்கு ஊதியம் வழங்கிய அரச புலனாய்வு! வெளியான அதிர்ச்சி தகவல்

பிள்ளையான் குழுவிற்கு ஊதியம் வழங்கிய அரச புலனாய்வு! வெளியான அதிர்ச்சி தகவல்


ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இராணுவ புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சாலே பற்றிய விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சாலே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறாத வகையில் கட்டளையொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் ஹபரணை பகுதிக்கு பிள்ளையானை அழைத்து வருமாறு குறிப்பிட்டதாக அசாத் மௌலானா வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது, என்னையும் இடமாற்றம் செய்யலாம்- இராணுவ சம்பளத்தை சிலவேளை தொகையாக கொடுக்க மாட்டார்கள் என சுரேஸ் சாலே குறிப்பிட்டதாக அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்.

அப்படியாயின் துணைஆயுதக்குழுக்களாக இயங்கியதற்கு நல்லாட்சி அரசாங்கம் பிள்ளையான் குழுவுக்கு ஊதியம் அரசதரப்பில் வழங்கியதை அசாத் மௌலானாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது

No comments: