News Just In

10/29/2020 03:55:00 PM

வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது- சுகாதார கட்டுப்பாடுகள் அவசியம்!!


மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: