News Just In

10/29/2020 10:46:00 AM

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!!


இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் அடிப்படையில் அரச அதிகாரிகள் தமது கடமைகளை உச்ச அளவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபங்களை அரச நிறுவன பிராதானிகள் கருத்திற் கொண்டு செயற்படுவது அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரச சேவை, மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: