News Just In

10/29/2020 11:51:00 AM

மட்டக்களப்பு- திராய்மடு பகுதியில் கால்நடை வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு!!


மட்டக்களப்பு- திராய்மடு பகுதியில் கால்நடை வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கான கட்டிடத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு திராய்மடு பிரதேசத்தின் 2ஆம் வட்டார மாநகரசபை உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இன்று (2020.10.29) வியாழக்கிழமை நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகரசபை ஆணையாளர் சித்திரவேல், மாநகர சபை பிரதி முதல்வர் சத்தியசீலன், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கால்நடை வளர்ப்பு பண்ணை கட்டிடமானது மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















No comments: